இனிப்புகளை பகிர்ந்து கொண்ட இந்திய - சீன வீரர்கள்

நாட்டின் 71-ஆவது சுதந்திர தினம் அனைத்து மாநிலங்களிலும் செவ்வாய்க்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், சிக்கிமில் அமைந்துள்ள இந்திய - சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் பரஸ்பரம்

நாட்டின் 71-ஆவது சுதந்திர தினம் அனைத்து மாநிலங்களிலும் செவ்வாய்க்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், சிக்கிமில் அமைந்துள்ள இந்திய - சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் பரஸ்பரம் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னைகள் போர்ச் சூழலாக மாறியுள்ள தருணத்தில் நடந்துள்ள இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியா, பூடான் மற்றும் சீனாவின் எல்லையாக விளங்கும் டோகலாமில் அத்துமீறி சாலை அமைத்து வரும் சீனப் படைகள், எல்லை தாண்டி வருவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்நிலையில், சிக்கிம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி அண்மையில் நுழைந்த விவகாரத்தில் இந்தியாவுக்கும், அந்நாட்டுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கு நடுவே இந்திய - சீன ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்ற கொடி அமர்வுக் கூட்டம் சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக நடைபெற்றது. இதில் இருநாட்டு பாதுகாப்புப் படை உயரதிகாரிகளும் பங்கேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
இந்த சூழலில், சுதந்திர தினத்தன்று சம்பிரதாயமாக இரு நாட்டு எல்லைப் படையினருக்கும் இடையே நடைபெறும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவில்லை. எனினும், இந்திய - சீன எல்லைப் படையினர் பரஸ்பரம் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com