சுவிஸ் வங்கி தகவல்களை இந்தியாவுடன் பகிர்வதற்கு எதிர்ப்பு

சுவிட்சர்லாந்து வங்கி தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதற்கு வகை செய்யும் ஒப்பந்தத்துக்கு அந்நாட்டைச் சேர்ந்த முக்கிய எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து வங்கி தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதற்கு வகை செய்யும் ஒப்பந்தத்துக்கு அந்நாட்டைச் சேர்ந்த முக்கிய எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த சில நாள்களிலேயே, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறிப்பாக, சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை வெளிக்கொணர்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அரசிடமும் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. முதலில், இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்து வந்த சுவிட்சர்லாந்து அரசு, பின்னர் தங்கள் நாட்டு வங்கி விவரங்களை பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - சுவிட்சர்லாந்து இடையே இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, தங்களது நாட்டினரின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை இரு நாடுகளும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த ஒப்பந்தமானது அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
இரு தரப்புக்கும் இடையேயான இந்த உடன்படிக்கையானது, இந்திய அரசின் கருப்புப் பண மீட்பு நடவடிக்கையின் முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்துக்கு சுவிட்சர்லாந்து நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான சுவிஸ் மககள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சுவிட்சர்லாந்து நாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வெளிநாட்டினரின் விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பகிர்வது என்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இது, மற்ற நாடுகளில் வசிக்கும் சுவிட்சர்லாந்து நாட்டினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளுடன் சுவிட்சர்லாந்து செய்து கொண்டுள்ள வங்கி விவரங்கள் பகிர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com