எல்லையோரக் கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் குண்டுவீசித் தாக்குதல் இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள இந்திய கிராமங்கள், ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் புதன்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள இந்திய கிராமங்கள், ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் புதன்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
பூஞ்ச் மாவட்டம் மாங்கோட், பசுனி, மெந்தர், மலிபூர், தர்னா, பத்ரி ஆகிய 6 இடங்களில் பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி புதன்கிழமை காலை திடீர் தாக்குதல் நடத்தினர். அப்பகுதியிலிருக்கும் இந்திய கிராமங்கள், இந்திய ராணுவ நிலைகள் மீது குண்டுகளை அவர்கள் வீசினர். பூஞ்ச் செக்டரில் சிறிய ரக ஆயுதங்கள், தானியங்கி துப்பாக்கிகள், சிறிய பீரங்கிகள் மூலம் தாக்குதல் மேற்கொண்டனர். இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
காயமடைந்த வீரர் மரணம்: முன்னதாக, உரி செக்டரில் பாகிஸ்தான் படையினர் கடந்த 7-ஆம் தேதி அத்துமீறி நடத்தியத் தாக்குதலில் காயமடைந்த இந்திய வீரர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். அவரது பெயர், நரேந்திர சிங் ஆகும். அவரது சொந்த ஊர், உத்தரகண்ட் மாநிலம், ஹரிபூர். அவருக்கு ஆஷா தேவு என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
முன்னதாக, இந்த மாதத்தில் பாகிஸ்தான் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 வீரர்களும், பெண் ஒருவரும் பலியாகியிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
இந்திய பகுதி மீது பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து இடைவிடாமல் 5-ஆவது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கடந்த 5 நாள்களில் நடத்தப்படும் 9-ஆவது தாக்குதல் ஆகும்.
இதனிடையே, பட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கடந்த 14-ஆம் தேதியன்று கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் ரியாஸ் அகமது என்ற வீரர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com