பாஜக கூட்டணியில் இணைய மாட்டோம்: தெலங்கானா ராஷ்டிர சமிதி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய மாட்டோம் என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.ஜிதேந்தர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இணைய மாட்டோம்: தெலங்கானா ராஷ்டிர சமிதி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய மாட்டோம் என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.ஜிதேந்தர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் ஆளும் கட்சியாக உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி, மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகியவற்றை ஆதரித்தது. மேலும், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்தது. இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அக்கட்சி இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. எனினும், தெலங்கானாவில் டிஆர்எஸ்ஸும் பாஜகவும் எதிரெதிராக அரசியல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், டிஆர்எஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் ஜிதேந்தர் ரெட்டி கூறியதாவது:
பிரச்னைகளின் அடிப்படையில் பாஜக அரசுக்கு ஆதரவு அளிப்போம். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய மாட்டோம். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையில் 16 கட்சிகள் இணைந்து அமைத்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியிலும் இணைய மாட்டோம். தெலங்கானாவுக்கு யார் மூலம் நன்மை கிடைக்குமோ அவர்களுடன் தெலங்கானா ராஷ்டிர சமிதி இருக்கும். இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவர்களது ஆதரவு தேவை என்றார்.
அடுத்த (2019) ஆண்டு நடைபெறவுள்ள தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறதே? என்ற கேள்விக்கு, தெலங்கானாவில் தேர்தலில் எங்களுக்கு நெருக்குதல் தரும் கட்சியாக பாஜகவை கருதவில்லை. மாநிலத்தின் நலனுக்காக எங்கள் கட்சி தீவிரமாக பாடுபட்டு வருகிறது. எனவே, மக்கள் எங்களுடன் இருப்பார்கள். மாநிலத்தில் வேறு எந்த கட்சியும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை என்றார்.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தங்கள் கட்சி ஆட்சியில் அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கடந்த மே மாதம் தெலங்கானாவுக்கு 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, தெலங்கானா பேரவைத் தேர்தலுக்கான உத்திகள் குறித்து கட்சியின் மாநிலத் தலைவர்களுடன் அவர் ஆலோசித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com