'புளூவேல்' விளையாட்டு: இணையதளங்களில் இருக்கும் பகிர்வுகளை நீக்கக்கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு

புளூவேல்' விளையாட்டு தொடர்பாக இணையதளங்களில் இருக்கும் பகிர்வுகளை (லிங்குகள்) நீக்கக்கோரி, தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தொடுக்கப்பட்டுள்ளது.

புளூவேல்' விளையாட்டு தொடர்பாக இணையதளங்களில் இருக்கும் பகிர்வுகளை (லிங்குகள்) நீக்கக்கோரி, தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தொடுக்கப்பட்டுள்ளது.
50 நாள்கள் வரையிலும் நீடிக்கக்கூடிய 'புளூவேல்' விளையாட்டில் ஈடுபடும் நபர்களை, முடிவில் அந்த விளையாட்டு தற்கொலைக்கு தூண்டுவதாகவும், இதனால் பலர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் போன்றோர் கடிதம் எழுதினர்.
இதையடுத்து, அந்த விளையாட்டு மீது மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்தது. இதுதொடர்பாக மத்திய மின்னணனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில், அந்த விளையாட்டுத் தொடர்பான லிங்குகளை நீக்கும்படி, பிரபல வலைதளங்களுக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் குர்மித் சிங் என்பவர் ஒரு பொதுநல மனுவை தொடுத்துள்ளார். அந்த மனுவில், 'புளூவேல்' விளையாட்டு தொடர்பாக கூகுள், முகநூல், யாகூ போன்ற வலைதளங்களில் இருக்கும் பகிர்வுகளை உடனடியாக நீக்கும்படி, அந்நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்; இந்த உத்தரவை மேற்கண்ட நிறுவனங்கள் செயல்படுத்துகின்றனவா? என்பதை கண்காணிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைக்கும்படி தில்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, தில்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கீதா மித்தல் (பொறுப்பு), நீதிபதி ஹரி சங்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com