ராஜீவ் காந்தி கொலை வழக்கு: மறுவிசாரணை அறிக்கையை தாக்க செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை அறிக்கையை தாக்க செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: மறுவிசாரணை அறிக்கையை தாக்க செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை அறிக்கையை தாக்க செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பான வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் ஒருவரான ஏ.ஜி. பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், "ராஜீவ் காந்தி கொலை வழக்குப் பின்னணியில் உள்ள மிகப்பெரிய சதியை சிபிஐ விசாரிக்கவில்லை. இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழு அதன் விசாரணையை முடிக்காமல் தாமதமாகச் செயல்படுகிறது' என முறையிடப்பட்டிருந்தது. 

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன எனக் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் இதுதொடர்பான மறுவிசாரணை அறிக்கையை தாக்க செய்ய சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com