4 ஆண்டுகளில் தேசியக் கட்சிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் ரூ.957 கோடி நன்கொடை

கடந்த 4 ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.956.77 கோடியை தேசியக் கட்சிகள் நன்கொடையாகப் பெற்றுள்ளன என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
4 ஆண்டுகளில் தேசியக் கட்சிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் ரூ.957 கோடி நன்கொடை

கடந்த 4 ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.956.77 கோடியை தேசியக் கட்சிகள் நன்கொடையாகப் பெற்றுள்ளன என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இதுதொடர்பாக, 'அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ்' என்ற அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் (2012-13 முதல் 2015-16) வரை, ரூ.20,000-க்கும் அதிகமான தொகையாக, மொத்தம் ரூ.1,070.68 கோடியை தேசியக் கட்சிகள் நன்கொடையாகப் பெற்றுள்ளன. அவற்றில், 89 சதவீதத் தொகை, அதாவது, ரூ.956.77 கோடியை பன்னாட்டு நிறுவனங்கள் நன்கொடையாகக் கொடுத்துள்ளன.
இதில், அதிகபட்சமாக, 2,987 பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.705.81 கோடியை பாஜக பெற்றுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, 167நிறுவனங்களிடம் இருந்து ரூ.198.16 கோடியை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.50.73 கோடியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.1.89 கோடியையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.18 லட்சத்தையும் நன்கொடையாகப் பெற்றுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் எந்தவொரு கொடையாளரும் ரூ.20,000-க்கு அதிகமான தொகையை நன்கொடையாகக் கொடுக்கவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது. எனவே, இதில் பகுஜன் சமாஜ் கட்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிதியாண்டில் ரூ.20,000க்கும் அதிகமான தொகையை நன்கொடையாக அளிப்பவர்கள் பற்றிய விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் சமர்ப்பித்தாக வேண்டும்.
அவ்வாறு, தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் அளித்த விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com