கருக்கலைப்பு செய்ய மறுக்கப்பட்டதால் குழந்தையைப் பெற்றெடுத்த 10 வயது சிறுமி

கருக் கலைப்பு செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தால் அனுமதி மறுக்கப்பட்ட சண்டீகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி குழந்தையைப் பெற்றெடுத்தார்
கருக்கலைப்பு செய்ய மறுக்கப்பட்டதால் குழந்தையைப் பெற்றெடுத்த 10 வயது சிறுமி

கருக் கலைப்பு செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தால் அனுமதி மறுக்கப்பட்ட சண்டீகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அந்தச் சிறுமி தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
சண்டீகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி வயிறு வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 30 வாரமாக சிறுமி வயிற்றில் கருவை சுமந்து வருவதாக தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அந்தச் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அவரது உறவினர் ஒருவர் பல மாதங்களாகச் சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது பின்னர் பெற்றோருக்குத் தெரிய வந்தது.
சிறுமியின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க அனுமதி கோரி சண்டீகர் மாவட்ட நீதிமன்றத்தில் பொது நல மனுவை அவரது பெற்றோர் தாக்கல் செய்தனர். ஆனால், 30 வார காலம் கடந்துவிட்டதால் கருவைக் கலைக்க அனுமதி வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
சிறுமியின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கருவைக் கலைக்க அனுமதி அளித்தால் தாய், சேயின் உயிருக்கு ஆபத்து வரும் என்பதைக் கருத்தில் கொண்டு அந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில், அந்தச் சிறுமியை சண்டீகர் நகரில் உள்ள அரசு மருத்துமவனையில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.
அங்கு சிசேரியன் மூலம் அந்தச் சிறுமியின் வயிற்றில் இருந்த குழந்தை வியாழக்கிழமை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், 'குழந்தையின் எடை 2.2 கிலோ இருந்தது. சிறப்புப் பிரிவில் குழந்தை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. 10 வயது சிறுமி நலமுடன் உள்ளார்' என்றார்.
அரசு குழந்தைத் தத்தெடுப்பு அமைப்பிடம் அந்தக் குழந்தை ஒப்படைக்கப்பட வேண்டும் என்று மருத்துவமனை அதிகாரிகளிடம் சிறுமியின் பெற்றோர் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com