கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதி வெற்றி: மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதி வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2011 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் சைதை துரைசாமியும், திமுக சார்பில் மு.க.ஸ்டாலினும் போட்டியிட்டனர். இதில், மு.க.ஸ்டாலின் வெற்றிப் பெற்றார். அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சைதை துரைசாமி தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.  

ஆனால் மு.க. ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை எனக் கூறி சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதை எதிர்த்து சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாணைக்கு வந்தது.  

அப்போது மு.க.ஸ்டாலின் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com