நடிகை பாவனா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: எம்எல்ஏவுக்கு கேரள பேரவைத் தலைவர் எச்சரிக்கை

மலையாள நடிகை பாவனா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை சுயேச்சை எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் தொடர்ந்து தெரிவித்து வந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மாநில சட்டப்

மலையாள நடிகை பாவனா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை சுயேச்சை எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் தொடர்ந்து தெரிவித்து வந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மாநில சட்டப் பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் எச்சரித்தார்.
மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த பாவனாவை கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று காரில் பாலியல் துன்புறுத்தல் செய்தனர். பின்னர், அந்த நபர்கள் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து பாவனா அளித்த புகாரின் அடிப்படையில் பல்சர் சுனில் என்பவர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீபும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாவனா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை ஜார்ஜ் தெரிவித்ததாகப் புகார் எழுந்துள்ளது.
ஜார்ஜுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு பாவனா கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார்.
இந்தச் சூழலில் முகநூலில் ஸ்ரீராமகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
எம்எல்ஏ ஜார்ஜின் கருத்து மனிதத்தன்மையற்றதாகும். அந்த நடிகைக்கு எதிராக இதுபோன்ற கருத்துகளை அவர் தொடர்ந்து தெரிவித்து வந்தால் சட்டப் பேரவைத் தலைவர் என்ற முறையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் அதுபோன்ற செயல்களை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது. அது குற்றம் செய்பவர்களுக்கு ஊக்கமளிப்பது போல் ஆகிவிடும்.
நடிகை கடத்தல் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று அந்தப் பதிவில் ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜுக்கு எதிராக வழக்கு: முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து எம்எல்ஏ ஜார்ஜுக்கு எதிராக கேரள மகளிர் ஆணையம் கடந்த திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com