மேற்கு வங்க நகராட்சித் தேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வெற்றி; பாஜகவுக்கு 2-ஆவது இடம்

மேற்கு வங்கத்தில் 7 நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிக வார்டுகளைக் கைப்பற்றி அந்த மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, நாடியா நகரில் ஒருவர் மீது மற்றொருவர் வண்ணப் பொடிகளைப் பூசிக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திரிணமூல் காங்கிரஸ்
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, நாடியா நகரில் ஒருவர் மீது மற்றொருவர் வண்ணப் பொடிகளைப் பூசிக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திரிணமூல் காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் 7 நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிக வார்டுகளைக் கைப்பற்றி அந்த மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
பாஜக இரண்டாவது இடத்தையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.
துப்குரி, பனியத்பூர், பன்ஸ்குரா, கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தில் உள்ள ஹால்டியா, நல்ஹதி, தினஜ்பூர், துர்காபூர் ஆகிய 7 நகராட்சி அமைப்புகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், 7 நகராட்சிகளிலும் பெரும்பாலான வார்டுகளைக் கைப்பற்றி திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
துர்காபூர் நகராட்சியில் உள்ள 43 வார்டுகளையும், ஹால்டியா நகராட்சியில் உள்ள 29 வார்டுகளையும் திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக ஹால்டியா ஒரு காலத்தில் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.
துப்குரியில் மொத்தமுள்ள 16 இடங்களில் 12-இல் திரிணமூல் காங்கிரஸும், 4 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றது. பனியத்பூரில் 13 இடங்களில் திரிணமூல் காங்கிரஸும், ஓரிடத்தில் பாஜகவும் வென்றது. பன்ஸ்குராவில் 17 வார்டுகளிலும், நல்ஹதியில் 14 வார்டுகளிலும் திரிணமூல் வென்றது.
ஜர்கிராம் நகராட்சிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
மகிழ்ச்சியில் திரிணமூல்: 'திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின்
மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நகராட்சித் தேர்தல் வெற்றி பிரதிபலிக்கிறது' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்தார்.
பாஜக தாக்கு: 'பணம் மற்றும் ஆள் பலத்தைப் பயன்படுத்தி நகராட்சித் தேர்தலில் திரிணமூல் வெற்றி பெற்றுள்ளது' என்று அந்த மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு: 'நேர்மையான முறையில் நகராட்சித் தேர்தல் நடைபெறவில்லை. மேற்குவங்கத்தில் தன்விருப்பம் போல் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி செய்துவருகிறது' என்றார் அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சௌத்ரி.
இதே கருத்தை தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி, 'நேர்மையாக நடைபெறாத நகராட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com