எரிபொருள்களுக்கு வாட் வரியை குறைக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு ஜேட்லி வலியுறுத்தல்

எரிபொருள்களுக்கு வாட் வரியை குறைக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு ஜேட்லி வலியுறுத்தல்

இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கான மதிப்புக் கூட்டு வரி (வாட்) அல்லது விற்பனை வரியைக் குறைக்க வேண்டுமென்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய நிதியமைச்சர்

இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கான மதிப்புக் கூட்டு வரி (வாட்) அல்லது விற்பனை வரியைக் குறைக்க வேண்டுமென்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல், விமானங்களுக்கான எரிபொருள் ஆகியவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. அவற்றுக்கு பழைய முறையில் விற்பனை வரி, வாட் வரி உள்ளிட்டவை விதிக்கப்படுகின்றன.
இதனால், இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிபொருளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது. மேலும் பிற தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே செலுத்திய வரித் தொகையைத் திரும்பப் பெறும் முறைப்படி (இன்புட் டாக்ஸ் கிரெடிட்) மூலம் வரியைத் திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால், வாட், விற்பனை வரி விதிக்கப்படும் எரிபொருள்களை பயன்படுத்தும் தொழில் நிறுவனங்கள் அதற்காக செலுத்திய வரியைத் திரும்பப் பெற முடிவதில்லை. இதனால் அந்த நிறுவனங்கள் பெரும் பாதிப்படைகின்றன.
இதனைச் சுட்டிக்காட்டி அனைத்து மாநில அரசுகளுக்கும் அருண் ஜேட்லி கடிதம் எழுதியுள்ளார். அதில், பெட்ரோலியப் பொருள்கள் மீது விதிக்கப்படும் வாட் வரி, விற்பனை வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும். ஏனெனில், ஜிஎஸ்டிக்கு முன்பு, பெட்ரோலியப் பொருள்களுக்கும், பிற பொருள்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறை இருந்தது. ஆனால், இப்போது ஜிஎஸ்டி அமல்படுத்தபட்ட பிறகு தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே பெட்ரோலியப் பொருள்களுக்கு வரி செலுத்திய நிலையில், அவற்றைக் கொண்டு தயாரிக்கும் பொருள்களுக்கும் கூடுதலாக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சில மாநிலங்களில் பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவுக்கு 5 சதவீத வாட் வரி விதிக்கப்படுகிறது.
எனவே, உற்பத்தித் துறையினர் பயன்படுத்தும் எரிபொருள்களுக்கான வாட், விற்பனை வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும். அப்போதுதான் உற்பத்திப் பொருள்களின் விலை உயர்வதும், விலை வேறுபாடுகளும் தவிர்க்கப்படும் என்று அந்தக் கடிதத்தில் ஜேட்லி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com