தில்லியில் போலீஸிடம் இருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்த நைஜீரியர் சாவு

தெற்கு தில்லியின் சத்தர்பூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் போதைப் பொருள் தொடர்பாக போலீஸார் வெள்ளிக்கிழமை சோதனையிட்டபோது,
தில்லியில் போலீஸிடம் இருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்த நைஜீரியர் சாவு

தெற்கு தில்லியின் சத்தர்பூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் போதைப் பொருள் தொடர்பாக போலீஸார் வெள்ளிக்கிழமை சோதனையிட்டபோது, 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்த நைஜீரியர் உயிரிழந்ததாக போலீஸார் கூறினர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு தில்லியின் சத்தர்பூர் பகுதியில் போதைப் பொருள் விநியோகிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, காவலர்கள் சிறப்புக் குழு ஒன்று அந்தப் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது, சத்தர்பூர் என்கிளேவ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த குடியிருப்பின் 4-ஆவது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சைப்ரியன் அமா ஓக்போனாயா (40) என்ற நைஜீரியர் கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்த நைஜீரியர் தங்கியிருந்த வீட்டில் சோதனையிட்டபோது அங்கு 25 கிலோ எடையிலான "கேட்டமைன்' போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சந்தை மதிப்பு ரூ.20 கோடி வரையில் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வீட்டில் இருந்த இரு நைஜீரியப் பெண்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

இதனிடையே, அந்த நைஜீரியர் உயிரிழந்ததற்கான துல்லியமான காரணத்தை கண்டறியும் வகையில் உடற்கூறு ஆய்வு அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று உயரதிகாரிகள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com