பாஜகவை அகற்ற இடதுசாரிகள் ஒன்றிணைய வேண்டும்

பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதவாத சக்திகளை அகற்ற இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
பாஜகவை அகற்ற இடதுசாரிகள் ஒன்றிணைய வேண்டும்

பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதவாத சக்திகளை அகற்ற இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
தனித்தனியே பிரிந்துள்ள இடதுசாரி இயக்கங்கள், தங்களது தற்போதைய நிலையை சுயபரிசோதனை செய்யக் கொள்ள வேண்டிய தருணம் இது என்றும் அவர் கூறியுள்ளார்.
கொள்கை அளவில் சில முரண்பாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1964-ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் இரண்டாகப் பிளவுபட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதிதாக உதயமானது. அடிப்படை கோட்பாடுகள் ரீதியாக இரு கட்சிகளும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தாலும், அரசியல் களத்தில் தனித்தனியாகவே அவை பயணித்து வருகின்றன. இதற்கு நடுவே அவற்றிலிருந்து பிரிந்து வேறு சில கட்சிகளும் புதிதாக உருவாகின. அக்கட்சிகள் அனைத்தையும் இணைப்பது குறித்த பேச்சுகள் கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளன. அதிலும், குறிப்பாக மார்க்சிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பே அக்கட்சித் தொண்டர்களிடம் மேலோங்கியுள்ளது.
இந்நிலையில், இடதுசாரி இயக்கமான லால் நிஷன் கட்சியை அதன் தாய் அமைப்பான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைக்கும் நிகழ்ச்சி மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலங்களவை எம்.பி. டி.ராஜா கலந்துகொண்டு பேசியதாவது:
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற வலதுசாரி சக்திகளுக்கு எதிராக வலுவுடன் அணிதிரள வேண்டிய வரலாற்றுத் தேவை தற்போது எழுந்துள்ளது. அதைக் கருத்தில் கொண்டு இடதுசாரி இயக்கங்களும், கட்சிகளும் ஓரணியில் இணைவது குறித்து அனைவரும் ஆலோசிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com