ராகுலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தெரியாது; தேச வரலாறும் தெரியாது: மன்மோகன் வைத்யா தாக்கு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பற்றியும் தெரியாது, நமது தேசத்தின் வரலாறும் தெரியாது என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் மன்மோகன் வைத்யா விமர்சித்துள்ளார்.
ராகுலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தெரியாது; தேச வரலாறும் தெரியாது: மன்மோகன் வைத்யா தாக்கு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பற்றியும் தெரியாது, நமது தேசத்தின் வரலாறும் தெரியாது என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் மன்மோகன் வைத்யா விமர்சித்துள்ளார்.
நாகபுரியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அவர் இது தொடர்பாக கூறியதாவது: இந்திய சமுதாயம் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. நமது நாட்டில் ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி கரைந்து வருகிறது. முன்னோர்கள் (நேரு, இந்திரா) செய்த சாதனைகளை வைத்து ஒருவரது (ராகுல் காந்தி) பலவீனத்தை மறைக்க முயற்சிக்கக் கூடாது. இது நமது சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியவில்லை. அதனைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவர் முயற்சித்ததும் இல்லை. அவருக்கு நமது தேசத்தின் வரலாறும் தெரியாது என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்கவில்லை என்று ராகுல் காந்தி பேசியுள்ளார். ஆனால், மகாத்மா காந்தி நடத்திய 3 சத்தியாகிரகப் போராட்டங்களில் இரண்டில் டாக்டர் ஹெட்கெவார் (ஆர்எஸ்எஸ் நிறுவனர்) பங்கேற்றுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தொடங்குவதற்கு முன்பு ஒருமுறையும், அதனைத் தொடங்கிய பின்னர் ஒருமுறையும் அவர் சத்தியாகிரகத்தில் பங்கேற்றுள்ளார். தனிநபராக அப்போராட்டத்தில் பங்கேற்றாரே தவிர, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக அதில் பங்கேற்கவில்லை.
ஆர்எஸ்எஸ் அமைப்பு நேரடியாக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. என்றாலும் அதன் தொண்டர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சுதந்திரத்துக்காக தூக்குத் தண்டனை எதிர்கொண்டுள்ளனர்; துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர்; சிறையில் பல கொடுமைகளையும் அனுபவித்துள்ளனர் என்றார் அவர்.
முன்னதாக, ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தி தலைவர் சரத் யாதவ், வியாழக்கிழமை நடத்திய எதிர்க்கட்சிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி, 'நமது அரசமைப்புச் சட்டத்தை தங்களுக்கு ஏற்ப வளைக்க வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் முயலுகிறது.
இந்த நாடு எங்களுக்குரியது என்று அவர்கள் (ஆர்எஸ்எஸ்) கூறுகிறார்கள். நாம் அனைவரும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நாங்கள் (காங்கிரஸ்) கூறுகிறோம்.
இதுதான் அவர்களுக்கும், எங்களுக்கும் உள்ள வேறுபாடு. தங்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வரை தேசியக் கொடிக்குக் கூட அவர்கள் மரியாதை செலுத்தியதில்லை' என்று கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com