பிரதமர் நரேந்திர மோடியை காணவில்லை: வாரணாசியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபப்பு நிலவி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை காணவில்லை: வாரணாசியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபப்பு நிலவி உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை "காணவில்லை" என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து பரேலி தொகுதியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் சோனியா காந்தியை "காணவில்லை" என்றும், அவரை கண்டுபிடித்து தருபவருக்கு வெகுமதி தரப்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் கடந்த மார்ச் 6 ஆம் தேதிக்கு பின்னர் மோடியை "காசிவாசி காணவில்லை" என அவரது புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகள் வெள்ளிக்கிழமை மாவட்ட நுழைவாயிலின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வாரணாசி (வடக்கு தொகுதி) பாஜக எம்எல்ஏ ரவீந்திர ஜெய்ஸ்வால் கூறுகையில், இந்த சுவரொட்டிகளுக்கு பின்னால் எதிர்க்கட்சி கட்சிகள் இருப்பதாகவும், மனநிலை பாதிக்கப்பட்டுள்ள அரசியல் எதிரிகளே இந்த செயலை செய்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் நகர தலைவர் சீதா ராம் கேஸ்ரி கூறுகையில், "காங்கிரஸ் எந்தவொரு போஸ்டரையும் ஒட்டவில்லை. வாரணாசி மக்கள் தங்கள் பிரதிநிதிகளை காணவில்லை என தேடுகிறார்கள். உள்ளூர் எம்.பி. பிரதமராக இருந்தாலும், நகரத்தில் இன்னமும் அடிப்படை வசதிகள் இல்லாமலும், சாலைகள் குண்டும் குழிகளாகவே உள்ளன என கூறினார்.

இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், போஸ்டரை அகற்றும் பணியில் மாநில பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com