இந்தியாவில்தான் கருத்து சுதந்திரம் மேலோங்கியுள்ளது: முக்தார் அப்பாஸ் நக்வி

கருத்து சுதந்திரத்துக்கு இடமளிப்பதிலும், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியா முதன்மையாக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள்
இந்தியாவில்தான் கருத்து சுதந்திரம் மேலோங்கியுள்ளது: முக்தார் அப்பாஸ் நக்வி

கருத்து சுதந்திரத்துக்கு இடமளிப்பதிலும், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியா முதன்மையாக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சில சம்பவங்களை பெரிதுபடுத்தி மதச் சாயம் பூசும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் தலைநகர் காந்தி நகரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முக்தார் அப்பாஸ் நக்வி, இதுதொடர்பாக பேசியதாவது:
உலக நாடுகள் எதிலும் இல்லாத பல்வேறு தனித்துவ சிறப்புகள் இந்தியாவுக்கு உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டை நம் நாட்டில்தான் பெரிதும் காண முடியும். கலாசாரம், மொழி, இனம், மதம், ஜாதி என பன்முகத்தன்மை கொண்ட தேசமாக விளங்கினாலும் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவது இங்குதான். அதிலும், மதபேதமின்றி வாழும் பக்குவம் இந்தியர்களின் மரபணுவிலேயே கலந்த ஒன்று.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சமூகத்தில் நிலவி வரும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் எதிர்க்கட்சியினர் செயல்படுகின்றனர். எந்த குற்றச் சம்பவங்கள் நடந்தாலும் அதற்கு ஜாதி - மத சாயம் பூசும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
மத்திய பாஜக அரசின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் ஏற்பட்ட விரக்தி காரணமாகவும், தங்களது அரசியல் சுய லாபத்துக்காகவும் ஜாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றை வைத்து தவறான பரப்புரையை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
கருத்து சுதந்திரத்திலும் சரி; சிறுபான்மை மக்களின் பாதுகாப்பிலும் சரி, உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியா பல மடங்கு முன்னே உள்ளது. சமூக நல்லிணக்கத்துக்குள் குழப்பம் விளைவிக்க சிலர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முறியடிக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com