கோரக்பூர் சம்பவம் அரசு ஏற்படுத்திய துயரம்: ராகுல் காந்தி தாக்கு

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 71 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மாநில அரசு ஏற்படுத்திய துயரம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. உடன், அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் உ
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. உடன், அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் உ

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 71 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மாநில அரசு ஏற்படுத்திய துயரம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் பிராண வாயு உருளை (ஆக்சிஜன் சிலிண்டர்) பற்றாக்குறை நிலவி வந்ததால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அரசு மருத்துவமனையில் நேரிட்ட இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் இல்லங்களுக்கு ராகுல் காந்தி சனிக்கிழமை சென்று ஆறுதல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரையும், உறவினர்களையும் சந்தித்தேன். பிராண வாயு உருளை பற்றாக்குறையாக இருந்ததன் காரணமாகவே குழந்தைகள் இறக்க நேரிட்டதாக அவர்கள் அனைவரும் என்னிடம் தெரிவித்தனர்.
இதன்மூலம், இந்த வேதனைக்குரிய சம்பவத்தை ஏற்படுத்தியது மாநில அரசுதான் என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
இந்தச் சம்பவத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் மூடி மறைக்க முயற்சிக் கூடாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது மாநில உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரக்பூர் அரசு மருத்துவமனையை நான் ஏற்கெனவே ஆய்வு செய்திருக்கிறேன். அப்போது, மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்றும் நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஊடகம் மூலம் கோரிக்கையை முன்வைத்தேன். ஆனால், அதன்பிறகு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புதிய இந்தியா குறித்து மோடி உரை நிகழ்த்துகிறார். எங்களுக்கு இதுபோன்ற புதிய இந்தியா தேவையில்லை.
ஏழைகள் தங்களது குழந்தைகளுடன் மருத்துவமனையிலிருந்து மகிழ்ச்சியாக வீடு திரும்ப வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம்.
கோரக்பூர் சம்பவத்தை மக்கள் கவனத்துக்குக் கொண்டு சென்ற ஊடகங்களுக்கு நன்றி. இந்த விவகாரம் ஒரு மாநிலம் சம்பந்தப்பட்டதல்ல.
இது தேசிய அளவில் நேரிட்ட துயரம். தேசத்தில் சுகாதாரத் துறை எப்படி இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டியிருக்கிறது என்றார் ராகுல் காந்தி.
முன்னதாக, குழந்தைகளை இழந்த பெற்றோர்களை சந்தித்த அவர், அவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் வழங்குவதாக உறுதி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com