கொசுக்களை ஒழிக்க கம்பாஷியா மீன்களை வளர்க்கலாம்

மலேரியா, டெங்கு போன்ற விஷ காய்ச்சலைக் கட்டுப்படுத்த அவற்றை பரப்பும் கொசுக்களை ஒழிக்க கொசுக்களின் முட்டைகள், லார்வாக்களை உண்ணும் கம்பாஷியா மீன்களை கழிவுநீர் சாக்கடைகள்,
கொசுக்களை ஒழிக்க கம்பாஷியா மீன்களை வளர்க்கலாம்

மலேரியா, டெங்கு போன்ற விஷ காய்ச்சலைக் கட்டுப்படுத்த அவற்றை பரப்பும் கொசுக்களை ஒழிக்க கொசுக்களின் முட்டைகள், லார்வாக்களை உண்ணும் கம்பாஷியா மீன்களை கழிவுநீர் சாக்கடைகள், நீர்நிலைகளில் வளர்க்க தெலங்கானா சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

மழைக்காலம் தொடங்கியதும் கொசுக்கள் மூலம் மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு போன்ற விஷ காய்ச்சல் பரவுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த மாநில அரசுகளும் பல வழிகளில் முயற்சி மேற்கொண்டுள்ளன.
தெலங்கானா மாநிலத்தில் ஆண்டுதோறும் 3,500 பேர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு மீன் வளர்ப்பு மூலம் கொசுக்களை ஒழிக்கும் புதியமுறையை இந்த ஆண்டு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
கம்பாஷியா வகை மீன்களை கொசு மீன் என்று அழைக்கின்றனர். இவ்வகை மீன்கள் குட்டை, கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகம் வளர்கின்றன. இவை 3 அங்குலம் மட்டுமே வளரும். இவற்றை யாரும் உணவுக்காகப் பயன்படுத்துவதில்லை. மேலும் இந்த மீன்கள், விஷ காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களின் முட்டை மற்றும் லார்வாக்களை மட்டுமே உண்பவை. ஒரு மீன் நாளொன்றுக்கு 360 கொசு முட்டை மற்றும் லார்வாக்களை உண்ணும் தன்மை கொண்டவை என்று தெலங்கானா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
எனவே இவ்வகை மீன்களை அதிக அளவில் வளர்த்து அவற்றை கழிவுநீர் தேங்கியுள்ள குட்டை, கால்வாய்களில் விட அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த மீன்களால் குட்டைகளில் உள்ள கொசுக்களை தவிர்த்து மற்ற ஜீவராசிகளுக்கு ஆபத்து இல்லை என்கின்றனர். மேலும் கொசுக்களை கட்டுப்படுத்த மீன்களை வளர்க்கும் முறை இந்தியாவில் 1928}ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com