பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் மோடி, அமித் ஷா இன்று சந்திப்பு

பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகின் றனர்.
பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் மோடி, அமித் ஷா இன்று சந்திப்பு

பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகின் றனர்.
இக்கூட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த 13 மாநில முதல்வர்கள் தவிர 6 துணை முதல்வர்களும், அமைச்சர்கள் சிலரும் பங்கேற்கவுள்ளனர். 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு பாஜக ஆளும் மாநில முதல்வர்களை மோடி சந்திப்பது இது 3-ஆவது முறையாகும்.
எனினும், பிகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சியில் பாஜக பங்கேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டமாகும். அம்மாநிலத்தில் பாஜக சார்பில் சுஷில் குமார் மோடி துணை முதல்வராக உள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்தும், மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 350 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை அமித் ஷா வெளியிட்ட இரு நாள்களில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான உத்திகளை வகுப்பது குறித்தும் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com