வழக்குரைஞராகவும், அரசியல்வாதியாகவும் இருப்பது எளிதல்ல

வழக்குரைஞராகவும், அரசியல்வாதியாகவும் இருப்பது எளிதான காரியமல்ல என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
வழக்குரைஞராகவும், அரசியல்வாதியாகவும் இருப்பது எளிதல்ல

வழக்குரைஞராகவும், அரசியல்வாதியாகவும் இருப்பது எளிதான காரியமல்ல என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

வழக்குரைஞராகவும், அரசியல்வாதியாகவும் இருந்துவரும் அருண் ஜேட்லி, ப.சிதம்பரம், ராம்ஜேத்மலானி, சாந்தி பூஷண், கிபில் சிபல், சம்மான் குர்ஷித், ரவிசங்கர் பிரசாத், முசாஃபர் ஹுசைன் பேக், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் குறித்து வழக்குரைஞர் ஸ்வேதா பன்சால் என்பவர் எழுதிய "கோர்ட்டிங் பாலிடிக்ஸ்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், "வழக்குரைஞராகவும் இருந்துகொண்டு அரசியலில் இயங்கிவருவது எளிதான காரியமல்ல. அதற்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும்' என்றார்.
இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்பு சட்டம் மற்றும் அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, கபில் சிபல் கூறியதாவது:
சட்டமும், சமூகமும் ஒரே வேகத்தில் செல்லாது. சட்டம் என்பது நிலையானது. ஆனால், சமூகம் முன்னேறிச் சென்றுகொண்டே இருக்கும். சட்டத்துக்கும், அரசியலுக்கும் இடையே மோதல் போக்கு இருக்கிறது என்றார் கபில் சிபல்.
முத்தலாக் விவகாரம் குறித்து பிரசாத் கூறுகையில், "அது மதம் சம்பந்தப்பட்டது அல்ல. பாலின சமத்துவம் சம்பந்தப்பட்டது' என்றார். எனினும், அவரது கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கபில் சிபல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com