ஹெலிகாப்டரில் ஆன்மிகச் சுற்றுலா: திருப்பதியில் விரைவில் தொடக்கம்

திருப்பதியில் விரைவில் புண்ணிய தலங்களுக்கு ஹெலிகாப்டரில் ஆன்மிகச் சுற்றுலா செல்லும் திட்டம் தொடங்க உள்ளதாக ஆந்திர சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹெலிகாப்டரில் ஆன்மிகச் சுற்றுலா: திருப்பதியில் விரைவில் தொடக்கம்

திருப்பதியில் விரைவில் புண்ணிய தலங்களுக்கு ஹெலிகாப்டரில் ஆன்மிகச் சுற்றுலா செல்லும் திட்டம் தொடங்க உள்ளதாக ஆந்திர சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏழுமலையானைத் தரிசிக்க திருப்பதிக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள், திருமலையில் மட்டுமன்றி திருப்பதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற புனிதத் தலங்களுக்கும் சென்று தரிசிக்கும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா வசதியைத் தொடங்க ஆந்திர மாநில சுற்றுலாத் துறை திட்டமிட்டது.
இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு ஸ்வதேஸ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ. 230 கோடியை இதற்காக ஒதுக்கீடு செய்தது.
இந்த நிதியிலிருந்து திருப்பதியில் உள்ள சீனிவாசத்தில் ஹெலிபேட் சுற்றுலா மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் இன்னும் ஓரிரு வாரத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து ஹெலிகாப்டரில் ஆன்மிகச் சுற்றுலா செல்லும் திட்டம் தொடங்கப்படும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com