லடாக்கில் இந்திய வீரர்கள்தான் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்: சீனா குற்றச்சாட்டு

லடாக் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சீன வீரர்கள் மீது இந்திய வீரர்கள்தான் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக சீனா திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

லடாக் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சீன வீரர்கள் மீது இந்திய வீரர்கள்தான் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக சீனா திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.
சிக்கிம் எல்லையில் இருக்கும் டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீன வீரர்கள் ஈடுபட்டதை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து, அங்கு இருதரப்பிலும் வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதால், போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், லடாக்கின் பேங்காங் நதியில் உள்ள இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிக்குள் சீன வீரர்கள் அண்மையில் ஊடுருவினர். இதை கண்டுபிடித்த இந்திய வீரர்கள், அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
அப்போது சீன வீரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தவே, இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்துள்ளனர். இதில் இருதரப்பிலும் வீரர்கள் லேசான காயமடைந்தனர்.
இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹு சுன்யிங்கிடம் இந்த சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
எல்லைக்கோடு பகுதியில் (எல்.ஏ.சி.) சீன வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் கடந்த 15ஆம் தேதி ஈடுபட்டிருந்தபோது, அந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது இந்திய தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். சீன வீரர்களை காயப்படுத்தியுள்ளனர்.
இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இந்த சம்பவத்துக்கு சீனா தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளது என்றார் ஹு சுன்யிங்.
முன்னதாக, லடாக் சம்பவம் குறித்து இந்தியா அண்மையில் கருத்து வெளியிட்டபோது, டோக்லாம் விவகாரத்துக்கு தீர்வு காண்பது தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், ஆனால் அதே நேரத்தில் லடாக் சம்பவம் போன்ற சம்பவம் தொடர்ந்தால், அது இருநாடுகளுக்கும் நல்லதல்ல என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com