10 ரூபாய் நோட்டுகளை நினைவுபடுத்தும் புதிய 200 ரூபாய் நோட்டு! நாளை வெளியீடு!!

10 ரூபாய் நோட்டுகளை நினைவுபடுத்தும் புதிய 200 ரூபாய் நோட்டு! நாளை வெளியீடு!!

புதிய ரூ.200 நோட்டு நாளை (வெள்ளிக்கிழமை) பொதுமக்களின் புழக்கத்துக்கு கொண்டுவர இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


புது தில்லி: புதிய ரூ.200 நோட்டு நாளை (வெள்ளிக்கிழமை) பொதுமக்களின் புழக்கத்துக்கு கொண்டுவர இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள 200 ரூபாய் நோட்டு ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டாக்டர் உர்ஜித் ஆர். பட்டேல் கையெழுத்திட்டுள்ளார்.

புதிதாக அச்சிடப்பட்டுள்ள 200 ரூபாய் தாளின் ஒரு பக்கத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படமும், மற்றொரு பக்கத்தில் சாஞ்சி ஸ்தூபியும் இடம்பெற்றுள்ளது. வெளிர் மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டிருக்கும் இந்த நோட்டின் முனைகளில், பார்வையற்றவர்களுக்காக அச்சிடப்படும் கோடுகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இரண்டு கோடுகள் நடுவில் இரண்டு வட்டங்கள் பிறகு இரண்டு கோடுகள் போடப்பட்டுள்ளன. நோட்டின் முன் பக்கத்தில் 'எச்' என்ற மைக்ரோ எழுத்தும் இடம்பெற்றுள்ளது.

இந்த 200 ரூபாய் தாளின் நடுவில் இருக்கும் பாதுகாப்பு இழை சாய்த்துப் பார்க்கும் போது பச்சை மற்றும் நீல நிறங்களில் மாறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேப்போல நோட்டின் கீழே இருக்கும் 200 ரூபாய் என்ற எழுத்தும் பச்சை மற்றும் நீல நிறத்தில் மாறும் இங்க் மூலமாக அச்சிடப்பட்டுள்ளது.

சில்லறைத் தட்டுப்பாடு வெகுவாகக் குறையும்
இதன் மூலம் ரூ.2,000 நோட்டுக்கான சில்லறைத் தட்டுப்பாடு வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பணப்புழக்கம் குறைந்தது. பழைய நோட்டுகளுக்கு மாற்றாக புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் கொண்டுவரப்பட்டாலும், வழக்கமான பணப் புழக்கம் இல்லை.

இதையடுத்து புதிதாக ரூ.200 நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகத்திடம் கடந்த மார்ச் மாதத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் புதிய ரூ.200 நோட்டுகளை அச்சடிப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, புதிதாக ரூ.50 நோட்டுகளை அறிமுகப்படுவதற்கான பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் புழக்கத்துக்குக் கொண்டு வரும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.200 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தால் நாட்டின் பணப் புழக்கப் பிரச்னை முழுமையாக நீங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விரைவில் 50 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்துக்கு விடப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com