இடஒதுக்கீடு முறையை மறுஆய்வு செய்யத் திட்டமா?: ஜேட்லி மறுப்பு

நாட்டில் தற்போதிருக்கும் இடஒதுக்கீடு நடைமுறையை மறுஆய்வு செய்யும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை தெரிவித்தார்.

நாட்டில் தற்போதிருக்கும் இடஒதுக்கீடு நடைமுறையை மறுஆய்வு செய்யும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை தெரிவித்தார்.
முன்னதாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், இடஒதுக்கீடு கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த 2015-ஆம் ஆண்டில் வலியுறுத்தியிருந்தார். தற்போதைய இடஒதுக்கீட்டு கொள்கை, அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தப்படுகிறது; உண்மையிலேயே யாருக்கு இடஒதுக்கீட்டுச் சலுகைகள் தேவை என்பது குறித்து ஆராய அரசியல் சார்பற்ற ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம், இடஒதுக்கீடு நடைமுறை மறுஆய்வு செய்யப்படவிருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், தற்போதுள்ள இடஒதுக்கீடு நடைமுறையை மறு ஆய்வு செய்யும் திட்டம், இப்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் இல்லை என்றார்.
இதேபோல, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை வகைப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக ஒரு ஆணையம் அமைக்கப்படுவது போல, தாழ்த்தப்பட்ட பிரிவினரையும் வகைப்படுத்தும் திட்டம் உள்ளதா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, இல்லை என்று ஜேட்லி பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com