2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு: செப்டம்பர் 20-ல் தீர்ப்பு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்துள்ள
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு: செப்டம்பர் 20-ல் தீர்ப்பு


புதுதில்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்துள்ள வழக்குகளில், தீர்ப்பு பற்றிய அறிவிப்பை செப்டம்பர் 20 ஆம் தேதி அறிவிப்பதாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன் சுமார் 7 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
எல்லா தரப்பினரின் வாதங்களை கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி,  'இந்த வழக்கில் தீர்ப்பு ஆவணங்களை எழுதி முடிக்கவும், வழக்கு தொடர்பான ஆவணங்களைப் படித்துப் பார்க்கவும் ஒரு மாதம் ஆகும். இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஏதேனும் பதிவு செய்ய விரும்பினால், அதற்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதன் பின்னர், ஆகஸ்ட் இறுதி வாரத்திலோ அல்லது செப்டம்பர் முதல் வாரத்திலோ தீர்ப்பு அளிக்கப்படும்' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வழக்கின் முழு ஆவணங்கள் முழுமையாக தயாராகாததால் இந்த வழக்கின் தீர்ப்பு பற்றிய அறிவிப்பை செப்டம்பர் 20 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று தெரிவித்துள்ளார்.

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, மத்திய தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஆ. ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே. சந்தோலியா உள்ளிட்ட 14 பேரின் வாதங்களும், வழக்கில் தொடர்புடைய ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் தரப்பின் வாதங்களும் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் இறுதியில் நிறைவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com