வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக பிகார் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக பிகார் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

பிகார் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக பிகார் புறப்பட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

புதுதில்லி: பிகார் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக பிகார் புறப்பட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

நாட்டின் வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. அண்டை நாடான நேபாளத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அதையொட்டி அமைந்துள்ள உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள், தேசியப் பேரிடர் மீட்புப் படை (என்டிஎஆர்எஃப்), மாநில ஆயுதப்படை போலீஸின் வெள்ள மீட்புப் படை ஆகியவை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.

பிகார் மாநிலத்தில் 21 மாவட்டங்கள் முழுமையாக பாத்திக்கப்பட்டுள்ளது. மழை-வெள்ள பாதிப்புக்கு இதுவரை 215 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 1.26 கோடி பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் இருந்து 4.21 லட்சம் பேர் மீட்கப்பட்டு, 1,358 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 2,569 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய உணவுக் கூடங்களில் உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படுகின்றன.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவ வீரர்கள் ஆகியோர் மீட்புப் படகுகளில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

முஸாபர்பூர், சமஸ்திபூர் மற்றும் தர்பங்கா மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. முஸாபர்பூர் நகர்புறப் பகுதிகளில் உள்ள திர்கட் கால்வாயில் தண்ணீர் நிரம்பி வழிவதால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகின்றன.

தர்பங்கா-சமஸ்திபூர் பகுதியில் ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிகார் புறப்பட்டுள்ளார்.

பிதரமர் நரேந்திர மோடி தனி ஹெலிகாப்டரில் பயணம் செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அராரியா, பூர்னியா மற்றும் கிஷான்கஞ்ச் ஆகிய பகுதிகளில்  ஆய்வு மேற்கொள்கிறார்.

பின்னர், முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com