பாலியல் குற்றவாளி ராம் ரஹீம் ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள் மீட்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற ராம் ரஹீம் ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள் செவ்வாய்கிழமை மீட்கப்பட்டனர்.
பாலியல் குற்றவாளி ராம் ரஹீம் ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள் மீட்பு

தேரா சச்சா சௌதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர் தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2002-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொண்டது. 

இந்நிலையில், குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் தண்டனை விவரங்கள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பின் தண்டனை விவரங்களை அறிவிப்பது தொடர்பாக ராம் ரஹீம் (50) அடைக்கப்பட்டுள்ள ஹரியாணாவின் ரோத்தக் மாவட்டம் சுனாரியா சிறையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற அறை உருவாக்கப்பட்டது. அங்கு அவருக்கு இந்த தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. 

நீதிபதி ஜெகதீப் சிங், ஹெலிகாப்டர் மூலமாக சுனாரியா சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். நீதிமன்றத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சிறைச்சாலை உள்ள பகுதியைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டது. எனவே 376 & 506 குற்றப்பிரிவுகளின் அடிப்படையில் இரு வழக்குகளிலும் தலா 10 ஆண்டுகள் வீதம் 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்த குற்ற வழக்குகளுக்கு ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.. மேலும், பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கும் தலா ரூ.14 லட்சம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், தேரா சச்சா சௌதா ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள் செவ்வாய்கிழமை மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் தற்போது மருத்துப் பரிசோதனை நடைபெறுவதாக சிரிஸா பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் கோவிந்த் குப்தா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com