பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ல் விண்ணில் பாய்கிறது: நாளை 29 மணிநேர ‘கவுண்ட்டவுன்’  தொடக்கம்

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 29 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நாளை
பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ல் விண்ணில் பாய்கிறது: நாளை 29 மணிநேர ‘கவுண்ட்டவுன்’  தொடக்கம்

சென்னை: பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 29 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நாளை தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) சார்பில் 31 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. வரிசையில் சி-39 ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்டது.

ஏற்கனவே, 7 செயற்கைகோள்களை திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் வருகிற 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இறுதிகட்ட பணியான 29 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ நாளை புதன்கிழமை (ஆக 30) பகல் 1.59 மணிக்கு தொடங்கி 31 ஆம் தேதி மாலை 6.59 மணிக்கு நிறைவடைந்தவுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. தற்போது ராக்கெட்டின் பாகங்கள் பொருத்தப்பட்டு, எரிபொருள் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.

இஸ்ரோ சார்பில் 2018 இல் சந்திரயான் - 2 மற்றும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 வரிசையில் டி2 என்ற அதிநவீன ராக்கெட் ஆகியவை விண்ணில் செலுத்துவதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com