கோத்ரா கலவரத்தால் பாதிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு: குஜராத் அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு! 

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகான கலவரங்களால் பாதிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களுக்கு குஜராத் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான குஜராத் அரசின் மனு...
கோத்ரா கலவரத்தால் பாதிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு: குஜராத் அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு! 

புதுதில்லி: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகான கலவரங்களால் பாதிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களுக்கு குஜராத் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான குஜராத் அரசின் மனு, உச்ச நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா என்னும் இடத்தில் கர சேவகர்கள் ரயில்பெட்டி ஒன்றில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் காரணமாக பெரும் கலவரம் பரவியது. கடுமையான உயிர்சேதமும் மிகப்பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டது. ஏகப்பட்ட வழிபாட்டு தலங்கள் இந்த கலவரத்தால் சிதைக்கப்பட்டன.   

கலவரத்திற்குப் பிறகு இவ்வாறு சிதைக்கப்பட்ட பல்வேறு வழிபாட்டு தலங்களை சரி செய்தல் மற்றும் மறு சீரமைப்பு செய்வதற்கான செலவுகளை குஜராத் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு   தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகான கலவரங்களால் பாதிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களுக்கு குஜராத் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவானது இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி பண்ட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. குஜராத் அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார்.

விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் துஷார் மேத்தா கூறியதாவது:

குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான குஜராத் அரசின் மனு, உச்ச நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு வழிபாட்டு தலங்கள், கடைகள் மற்றும் வீடுகள் முதலியவற்றை சீரமைக்க கருணைத் தொகை வழங்கும் திட்டம் ஒன்றையும் நீதிமன்றத்தில் அறிவித்தோம்.  அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு எங்கள் மனுவினை விசாரணைக்கு அனுமதித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com