கோரக்பூர் மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் பலி

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ள


கோரக்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் நடத்துள்ளது. இதில் 7 குழந்தைகள் மூளையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் மற்ற குழந்தைகள் வேறு பல காரணங்களால் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவமனை முதல்வர் பி.கே. சிங் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 7-ஆம் தேதியில் இருந்து 17-ஆம் தேதி வரை, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 71 குழந்தைகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகித்து வந்த தனியார் நிறுவனம் தனது நிலுவைத் தொகைக்காக ஆகிஸிஜன் விநியோகத்தை நிறுத்தியதே குழந்தைகள் அடுத்தடுத்து பலியானதற்குக் காரணம் எனக் கூறப்பட்ட விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சோக வடு நெஞ்சை விட்டு நீங்காத நிலையில், அதே மருத்துவக்கல்லூரி மருத்துவனையில், கடந்த 48 மணி நேரத்தில் மூளை வீக்கம் மற்றும் பல காரணங்களால் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோரக்பூர் மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 71 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக மருத்துவக்கல்லூரி முதல்வர் மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com