பாகிஸ்தானைச் சேர்ந்த குழந்தைக்கு மருத்துவ விசா

இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த குழந்தைக்கு, இந்தியாவில் சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக மருத்துவ விசா
பாகிஸ்தானைச் சேர்ந்த குழந்தைக்கு மருத்துவ விசா

இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த குழந்தைக்கு, இந்தியாவில் சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக மருத்துவ விசா உடனடியாக வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த பெண் மேவிஷ் முக்தார். இவருக்கு கடந்த மாதம் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை பரிசோதித்ததில், அதற்கு பிறவியிலேயே இருதயக் கோளாறு இருப்பது தெரியவந்தது.
மேலும், இந்த இருதயக் கோளாறை சரிசெய்யும் வசதி பாகிஸ்தானில் இல்லை என்று அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்தியாவில் அக்குழந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள மேவிஷ் முக்தார் முயற்சித்தார்.
ஆனால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால், பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதில் அதிகப்படியான கட்டுப்பாடுகளை இந்திய அரசு விதித்துள்ளது. அதாவது, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்தியா வருவதற்கு விசா வழங்கப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதுபோன்ற நிபந்தனைகள் காரணமாக, அந்தக் குழந்தைக்கு விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் சுட்டுரை மூலமாக
அக்குழந்தைக்கு விசா வழங்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு பதிவினை வெளியிட்டார். அதில், 'இருதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக மருத்துவ விசா வழங்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com