பினாமி சொத்துகள் தொடர்பான வழக்கு லாலுவின் மனைவி, மகனிடம் வருமான வரித்துறை விசாரணை

பினாமி பெயரில் சொத்துகளை வாங்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, அவரது மகன் தேஜஸ்வி யாதவ்
பிகார் தலைநகர் பாட்னாவில் ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜரான வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர்.
பிகார் தலைநகர் பாட்னாவில் ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜரான வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர்.

பினாமி பெயரில் சொத்துகளை வாங்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.
பினாமி பெயரில் சொத்துகளை வாங்கி குவித்திருப்பதாகவும், ரூ.1,000 கோடி மதிப்பிலானûû நில ஒப்பந்தத்தில் தொடர்பிருப்பதாகவும் லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறை வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில், லாலுவின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான மிசா பார்தி, அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோரிடம் வருமான வரித்துறை அண்மையில் விசாரணை நடத்தியது. மேலும், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, தேஜஸ்வி, லாலுவின் மகள்கள் சந்தா, ராகினி யாதவ், பாரதி, மருமகன் குமார் ஆகியோருக்குச் சொந்தமாக தில்லி, பிகார் மாநிலங்களில் இருந்த சொத்துகளையும் வருமான வரித்துறை முடக்கியது.
இந்நிலையில், ராப்ரி தேவிக்கும், தேஜஸ்விக்கும் பாட்னாவில் நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. அதையேற்று, பாட்னாவில் இருக்கும் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருவரும் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகினர்.
வழக்கு விசாரணையில் பிகார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உதவி செய்வதற்காக, பாட்னாவுக்கு தில்லியில் இருந்து வருமான வரித்துறை சிறப்புக் குழு வந்திருந்தது. விசாரணையின்போது ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் வாக்குமூலங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.
முன்னதாக, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே, தங்கள் குடும்பத்தினருக்கு எதிராக வருமான வரித்துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com