மருத்துவமனைகளில் வாடகை அறைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு

மருத்துவமனைகளில் வாடகைக்கு எடுக்கப்படும் அறைகளுக்கு நோயாளிகளால் செலுத்தப்படும் கட்டணத்துக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் வாடகைக்கு எடுக்கப்படும் அறைகளுக்கு நோயாளிகளால் செலுத்தப்படும் கட்டணத்துக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய கலால் மற்றும் சுங்க வரிகள் வாரியத்தின் இணையதளத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவில் இடம்பெற்றுள்ள தகவல்:
மருத்துவமனைகளில் வாடகைக்கு எடுக்கப்படும் அறைகளுக்கு நிர்ணயிக்கப்படும் வாடகைக் கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட மாட்டாது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் மாளிகைகளில் வாடகை அறைகளுக்கு ஜிஎஸ்டி கட்டணம் விதிக்கப்படும்.
அறைகளின் வாடகைக் கட்டணம் ரூ.1,000-க்கு மேல் ரூ.2,500-க்குள் வந்தால் 12 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும். ரூ.2,500-இல் இருந்து ரூ.7,500 வரை வரையிலான
வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டியும், ரூ.7,500-க்கும் மேல் விதிக்கப்படும் வாடகைக்கு 28 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படும். கூடுதல் படுக்கை வசதி உள்ளிட்ட சேவைகளுடன் சேர்த்து நிர்ணயிக்கப்படும் வாடகைக் கட்டணத்துடன் ஜிஎஸ்டியும் சேர்க்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com