தமிழக அரசியல் நிலவரம்: ராஜ்நாத் சிங்குடன் மு.தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை,
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புதன்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்த மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.தங்கமணி.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புதன்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்த மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.தங்கமணி.

புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் (மீன்வளத் துறை), பி.தங்கமணி (மின் துறை) ஆகியோர் புதன்கிழமை காலை நேரில் சந்தித்துப் பேசினர்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மு.தம்பிதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தாலும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் அவர்கள் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததைத் தொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் தமிழக முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், தில்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி. தங்கமணி, சி.வி. சண்முகம், மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் வா.மைத்ரேயன், மாநிலங்களவை முன்னாள் அதிமுக உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இவர்களில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், புதன்கிழமை காலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.தங்கமணி, மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் மு.தம்பிதுரை கூறியதாவது: 
தில்லியில் செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன்ஆகியோரைச் சந்தித்து தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து பல்வேறு துறைகள் மூலமாக வரவேண்டிய ரூ.17 ஆயிரம் கோடி நிதியை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம். இதைத் தொடர்ந்து, புதன்கிழமை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அப்போது, தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி குறித்தும் பேசினோம்.
மத்திய அரசுடன் இணக்கமான உறவைப் பேணி வருகிறோம். இதன் மூலம் தமிழகத்தின் நலன்களுக்காக போராடி வருகிறோம் என்பதை மக்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். இரட்டை இலை எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட சின்னம். அவர்கள் உருவாக்கிய ஆட்சிதான் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகவே, ஆட்சியும், கட்சியும் ஒன்றுதான். கட்சியில் பிளவு என்பது கிடையாது. கருத்து வேறுபாடும் கிடையாது. ஒற்றுமையாக இருக்கிறோம் என்றார் அவர்.
தமிழக அரசியல் விவகாரம்: அதிமுகவின் மற்றொரு அணியாக செயல்படும் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக 19 எம்எல்ஏக்கள், முதல்வர் பழனிசாமியை மாற்றக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ள நிலையில், திமுக செயல் தலைவர் தமிழக முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று கோரி வருகிறார். இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஒருவித நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான அரசியல் நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தம்பிதுரையும், தமிழக அமைச்சர்களும் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com