உ.பி. உள்ளாட்சி தேர்தல்: லக்கி டிராவில் ஜாக்பாட் அடித்த பாஜக!

உத்தரப்பிரதேச உள்ளாட்சி தேர்தலில் ராகுலின் அமேதி தொகுதி நகராட்சி உட்பட பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது பாஜக.
உ.பி. உள்ளாட்சி தேர்தல்: லக்கி டிராவில் ஜாக்பாட் அடித்த பாஜக!

உத்தரப்பிரதேச உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் ஆளும் பாஜக முன்னிலை வகிக்கிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளான 438 நகராட்சிகள், 198 பஞ்சாயத்து மற்றும் 16 மாநகராட்சிகளுக்கான நவம்பர் 22, 26 மற்றும் 29 தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இதில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தங்கள் சொந்த சின்னங்களுடன் போட்டியிட்டன. அதிலும் குறிப்பாக 17 வருடங்களுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தனது சொந்த சின்னத்தில் போட்டியிட்டது.

இதையடுத்து டிசம்பர் 1-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் பாஜக பிரதான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 16 மாநகராட்சிகளில் 14 இடங்களில் முன்னிலையில் நீடிக்கிறது. இதர இரு இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி முன்னிலையில் உள்ளது.

மேலும் பெரும்பாலான நகராட்சி மற்றும் பஞ்சாயத்து வார்டுகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. இதில் அதிக இடங்களில் காங்கிரஸ் 3-ஆவது அல்லது 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுராவில் உள்ள 56-ஆவது வார்டு வாக்கு எண்ணிக்கையின் போது சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது. அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் பதிவான மொத்த வாக்குகளில் முறையே 874 வாக்குகளைப் பெற்று சமநிலைப் பெற்றது.

இதையடுத்து வெற்றியாளரைத் தேர்வு செய்யும் விதமாக லக்கி டிரா திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் மீரா அகர்வாலுக்கு ஜாக்பாட் அடித்தது. அவர் அந்த வார்டின் பிரதிநியாக வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டார்.

அதுபோன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் சட்டப்பேரவைத் தொகுதியான அமேதி நகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com