அடுத்த ஆண்டு தீபாவளி அயோத்தி ராமர் கோவிலில்தான்: ஆருடம் சொல்லும் சுப்பிரமணியன் சுவாமி! 

அயோத்தியில் அமைய உள்ள  ராமர் கோவிலில் அடுத்த ஆண்டு தீபாவளியை பக்தர்கள் கொண்டாடலாம் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தீபாவளி அயோத்தி ராமர் கோவிலில்தான்: ஆருடம் சொல்லும் சுப்பிரமணியன் சுவாமி! 

புதுதில்லி: அயோத்தியில் அமைய உள்ள  ராமர் கோவிலில் அடுத்த ஆண்டு தீபாவளியை பக்தர்கள் கொண்டாடலாம் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி விரைவில் தொடங்கும். , பக்தர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு தீபாவளியை அங்கு சென்று கொண்டாடலாம்.

மற்ற விஷயங்கள் எல்லாம் தயாராகிவிட்டது. புகழ்பெற்ற சுவாமி நாராயண் கோவிலைப் போன்று  உள்கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, அதை மட்டும் அங்கு பொருத்தினால் போதும். கோவில் முழுமையாகத்  தயாராகிவிடும்.

இந்த விவகாரம் தொடர்பாக நரசிம்ம ராவின் காங்கிரஸ் அரசு உச்ச நீதின்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பாத்திரத்தில் அங்கு கோவில் முன்னரே இருப்பது உறுதி செய்யப்பட்டால், சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைத்தாக வேண்டும் என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கோவிலைக் கட்டுவதற்கு என்று புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டுவர வேண்டிய அவசியம் கிடையாது.  அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கில் நாங்கள் இறுதி வெற்றி பெறுவோம்

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com