வந்தாச்சு...பைக் ஓட்டுபவர்களுக்கு என கூகுள் மேப்ஸில் புதிய வசதி! 

வாகனப் போக்குவரத்துக்கேற்ற சுலபமான வழிகளைத் தேர்தெடுக்க உதவும் கூகுள் மேப்ஸில் பைக் ஓட்டுபவர்களுக்கு என பிரத்யேகமான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வந்தாச்சு...பைக் ஓட்டுபவர்களுக்கு என கூகுள் மேப்ஸில் புதிய வசதி! 

புதுதில்லி: வாகனப் போக்குவரத்துக்கேற்ற சுலபமான வழிகளைத் தேர்தெடுக்க உதவும் கூகுள் மேப்ஸில் பைக் ஓட்டுபவர்களுக்கு என பிரத்யேகமான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு புதிதாக ஒருவர் செல்ல விரும்பும் பொழுது அவருக்கு கை கொடுக்கும் சாதனமாக கூகுள் மேப்ஸ் விளங்குகிறது. குறிப்பாக வாடகை கார் இயக்கும் நிறுவனங்களுக்கு இந்த சேவை வரப்பிரசாதமாக விளங்குகிறது. ஆனால் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு என இந்த சேவையில் தனிப்  பிரிவு இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கூகுள் மேப்ஸில் பைக் ஓட்டுபவர்களுக்கு என பிரத்யேகமான புதிய வசதி செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் இந்த சேவை அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமான சேவை போன்று இதிலும் குரல் வழி வழிகாட்டும் சேவையும் உள்ளது.

கூகுள் மேப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே இருக்க கூடிய ட்ரைவ், ட்ரெயின் அல்லது பஸ் மற்றும் வாக் ஆகிய வசதிகளோடு தற்பொழுது பைக் வசதியும் புதிதாக சேர உள்ளது. உலகிலேயே முதன் முறையாக இந்தியாவில்தான் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதர வாகனங்கள் எளிதில் அணுக முடியாத 'குறுக்கு வழிகள்' பைக் சேவைக்கு என ஒதுக்கப்படும். அத்துடன் பயண நேரம் மற்றும் சென்று சேரும் நேரம் முதலியவையும் இதில் உங்களுக்கு கிடைக்கும்.

இது குறித்து கூகுள் துணைத் தலைவர் சீசர் சென்குப்தா கூறியதாவது:

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தையாக இந்தியா உள்ளது. எனவே இதனைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பயனாளர்களுக்கு என இதர வாகனகளைப் போல அல்லாமல் பிரத்யேக வசதிகளை அளிக்க வேண்டிய தேவை உள்ளது.      

இந்தியர்கள் பெரும்பாலும் பைக் பயணத்தின் பொழுது உள்ளூர் அடையாளத் தலங்களையே நினைவினைல் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அதன்படி  பயனாளர்கள் செல்லும் வழியில் உள்ள உள்ளூர் அடையாளத் தலங்கள் அனைத்தும் தெளிவாக இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இவ்வாறு சென்குப்தா தெரிவித்தார்.

மற்ற நாடுகளுக்கும் இந்த வசதி விரைவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com