சுட்டுரையில் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரிப்பு

சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது.
சுட்டுரையில் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரிப்பு

சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, சுட்டுரை நிறுவனம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
நிகழாண்டு டிசம்பர் 4-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, பிரதமர் மோடியைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 3.57 கோடியாகும். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு 2.46 கோடியாக இருந்தது. இது, 52 சதவீத அதிகரிப்பாகும்.
இதேபோல, சுட்டுரையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 61 சதவீதம் அதிகரித்துள்ளது. அவரைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1.29 கோடியாக இருந்த நிலையில், நிகழாண்டு 2.08 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரைப் பொருத்தவரை, சுட்டுரையில் அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 56 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் சுட்டுரையில் அதிகம் பின்தொடரப்படும் முதல் 10 நபர்களின் பட்டியலில் மேற்கண்ட இருவரும் இணைந்துள்ளனர்.
அந்தப் பட்டியலில், ஹிந்தி திரைப்பட நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாரூக் கான், சல்மான் கான், அக்ஷய் குமார், ஆமிர் கான், ஹிருத்திக் ரோஷண், நடிகை தீபிகா படுகோனே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஷாரூக் கான் (3.09 கோடி), சல்மான் கான் (2.85 கோடி) ஆகியோரைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை தலா 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல, இந்தியா, பாகிஸ்தான் மோதிய ஐஐசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டி, சரக்கு சேவை வரி, முத்தலாக் விவகாரம் ஆகியவை சுட்டுரையில் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்று அந்தத் தக
வலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com