காங்கிரஸ் கட்சியில் இருந்து மணிசங்கர் ஐயர் தற்காலிக இடைநீக்கம்

பிரமதர் நரேந்திர மோடி மீதான தனது விமர்சனம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் அக்கட்சியில் இருந்து வியாழக்கிழமை தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து மணிசங்கர் ஐயர் தற்காலிக இடைநீக்கம்

பிரதமர் நரேந்திர மோடி மீதான விமர்சனம் தொடர்பாக மணிசங்கர் ஐயருக்கு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அவரை கட்சியில் இருந்தும் தற்காலிக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

மோடி விமர்சனம் தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டதாக மணிசங்கர் ஐயர் விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பிரமதர் மோடியை நான் விமர்சித்த வார்த்தை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது. எனது தாய்மொழி ஹிந்தி அல்ல, எனவே நான் ஆங்கிலத்தில் கூறியதால் இதுபோன்று வெளியாகியுள்ளது. என்னுடைய தவறான மொழிபெயர்ப்புக்கு மன்னிப்பு தெரிவித்துக்கொள்கிறேன். 

நான் காங்கிரஸ் கட்சியின் எந்தப் பதவியிலும் இல்லை. ஒரு சாதாரண தொண்டனாக மட்டுமே உள்ளேன். எனக்கென்று பேச உரிமை உள்ளது. நான் பேசுவதை தனது சுயலாபத்துக்கு ஏற்றமாதிரி பிரதமர் மோடியும், பாஜக-வும் மாற்றி விமர்சனங்களை எழுப்புகிறது.

நான் கீழ்த்தரமான புத்தி கொண்டவர் என்பதை கீழ்த்தரமான மனிதர் என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதை பிரதமர் மோடி, குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது வேறுமாதிரி பேசி அரசியல் லாபம் தேட விரும்புவதாக விளக்கமளித்தார்.

முன்னதாக, மணிசங்கர் ஐயரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும், பாஜக-வும், பிரமதர் மோடியும் தான் காங்கிரஸ் மீது இதுபோன்று கீழ்த்தரமாக விமர்சிப்பர். ஆனால், காங்கிரஸுக்கு என்று ஒரு மாண்பு உள்ளது. எனவே இதற்கு மணிசங்கர் ஐயர் மன்னிப்பு கோர வேண்டும் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதேபோன்று, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடந்த பிரசாரத்தின் போது, நரேந்திர மோடி வேண்டுமென்றால் காங்கிரஸாரிடம் டீ விற்பனை செய்யலாம். ஆனால், நாட்டின் பிரதமராக முடியாது என்று சர்ச்சைக்குரிய கருத்தினை பதிவு செய்தார்.

பின்னர் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று பாஜக ஆட்சியமைத்ததும், 'சாய் பே சர்ச்சா' என்ற பெயரில் பிரமதர் மோடி, மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை துவங்கி அதற்கு பதிலடி அளித்தார்.

ஆனால், தான் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றும், வேண்டுமென்றால் இணையத்தில் சென்று சோதித்துக்கொள்ளுமாறும் மணிசங்கர் ஐயர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com