எல்லைகளைக் காப்பதில் அரசு உறுதி

நாட்டின் எல்லைப் பகுதிகளைக் காப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
எல்லைகளைக் காப்பதில் அரசு உறுதி

நாட்டின் எல்லைப் பகுதிகளைக் காப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
வங்க தேசத்தை ஒட்டியுள்ள மாநிலங்களின் முதல்வர்களுடனான கூட்டம், கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, கொல்கத்தாவுக்கு புறப்படும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்நாத் சிங், மேற்கண்டவாறு கூறினார்.
இதுதொடர்பாக, உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியதாவது:
வங்கதேசத்துடன் 4.096 கி.மீ. தொலைவு எல்லையை இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது. மேற்கு வங்கம், அஸ்ஸாம், மேகலாயம், திரிபுரா, மிúஸாரம் ஆகிய மாநிலங்கள், வங்கதேசத்தையொட்டி அமைந்துள்ளன. இந்த நிலையில், 5 மாநில முதல்வர்களின் கூட்டத்துக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங், அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் 5 மாநில முதல்வர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
எல்லைகள் வழியாக வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களும், ரோஹிங்கயா அகதிகளும் சட்ட விரோதமாக ஊடுருவுவதைத் தடுப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், எல்லைகள் வழியாக, கள்ள நோட்டுகள், போதை மருந்துகள் ஆகியவை கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
இது, சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுடனான நான்காவது ஆலோசனைக் கூட்டமாகும். இதற்கு முன்பு, பாகிஸ்தான், சீனா, மியான்மர் ஆகிய அண்டை நாடுகளை ஒட்டியுள்ள மாநிலங்களின் முதல்வர்களை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசியுள்ளார் என்று அந்த அதிகாரி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com