காவல் நிலையத்தில் குத்தாட்டம் போட்ட துணை ஆய்வாளர்: பிறகென்ன பணியிடை நீக்கம்தான்

மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் பகுதியில் உள்ள ஹிராப்புர் காவல்நிலையத்தில் குத்தாட்டம் போட்ட காவலரின் விடியோ வைரலானதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
காவல் நிலையத்தில் குத்தாட்டம் போட்ட துணை ஆய்வாளர்: பிறகென்ன பணியிடை நீக்கம்தான்


மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் பகுதியில் உள்ள ஹிராப்புர் காவல்நிலையத்தில் குத்தாட்டம் போட்ட காவலரின் விடியோ வைரலானதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தான் மிகவும் எதிர்பார்த்திருந்த பணியிட மாற்றம் கிடைத்தது குறித்து செய்தி அறிந்ததும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் காவல்நிலையத்தில் நடனமாடிய விடியோ சமூக தளங்களில் கடந்த வாரம் வைரலானது.

ஹிராப்புர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த கிருஷ்ணா சதன் மண்டல் என்ற துணை ஆய்வாளர், காவல்நிலையத்தில்  இரண்டு பெண் ஊழியர்கள் முன்னிலையில் நடனமாடுவதும், அதனை சிலர் ஊக்குவிப்பதும் விடியோவில் பதிவாகியுள்ளது. இதனை சக காவலரே விடியோ பதிவு செய்துள்ளார்.

ஆனால், அவர்களது கொண்டாட்டம் இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து திண்டாட்டமாக மாறியது.

பணி நேரத்தின் போது, காவல் நிலையத்திலேயே பாலிவுட் பாடலுக்கு நடனமாடியக் குற்றத்துக்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலத்தில் புர்த்வான் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அசன்சோல் - துர்காபுர் காவல்நிலையத்துக்கு இட மாறுதல் கிடைத்த மகிழ்ச்சியில்தான் அவர் காவல்நிலையத்தில் நடனமாடியுள்ளார். இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
 

எனினும் அவர் யாரையும் துன்புறுத்தவில்லை, பிறரை தொல்லை செய்யவில்லை. தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நடனம் ஆடியுள்ளார். காவல்நிலையத்தில் பணி நேரத்தின் போது இப்படி நடந்து கொள்வது தவறே என்றாலும், இதை விட எத்தனையோ மோசமான செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்து வரும் நிலையில், அதற்கெதிராகவே இரும்புக் கரங்களை நீட்ட வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியாக விசாரணை நடத்தும் அளவுக்கு இது மிக மோசமான குற்றமில்லை என்றே கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com