புதிய வீடு, மனைவி, பைக்.. யார் இவர்? அன்று மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றவரா?

ஒடிசா மாநிலம் கலாஹந்தியில், கடந்த ஆண்டு உயிரிழந்த தனது மனைவியின் உடலை கொண்டு வர ஆம்புலன்ஸுக்குத் தர பணம் இல்லாததால், தோளில் சுமந்து சென்ற தானா மஜ்கியை நினைவிருக்கிறதா?
புதிய வீடு, மனைவி, பைக்.. யார் இவர்? அன்று மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றவரா?


புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கலாஹந்தியில், கடந்த ஆண்டு உயிரிழந்த தனது மனைவியின் உடலை கொண்டு வர ஆம்புலன்ஸுக்குத் தர பணம் இல்லாததால், தோளில் சுமந்து சென்ற தானா மஜ்கியை நினைவிருக்கிறதா?

ஆம்.. அவரே தான். தானா மஜ்கி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காசநோய் பாதித்து உயிரிழந்த தனது மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி, மகளுடன் நடந்து சென்ற தானா மஜ்கியின் புகைப்படம் சமூகத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து அவருக்கு பலரும் நேசக் கரம் நீட்டினர்.

அதோடு மட்டுமல்ல, தானா மஜ்கி குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்க பஹ்ரைன் பிரதமர்  முன்வந்தார். தானா மஜ்கி குடும்பத்துக்கு பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா, ரூ.9 லட்சத்தை நிதியுதவியாக அளித்தார்.

இந்த நிலையில், தானா மஜ்கிக்கு, பிரதான் மந்திரி கிராமீன் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. வீடு கட்டி முடிக்கப்படும் வரை அவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் வசித்துவருகிறார்.

அவரது மூன்று மகள்களும், புவனேஸ்வரில் உள்ள பள்ளியில் படிக்கிறார்கள். அந்த பள்ளியே, முன்வந்து, மூன்று பெண்களுக்கும் இலவச கல்வியை அளித்து வருகிறது. இதற்கிடையே, மஜ்கி மறுமணமும் செய்து கொண்டார். அவரது மனைவி தற்போது கர்பிணியாக உள்ளார். 
 

பலரது உதவிகளால், மஜ்கியின் கனவு பெரிதாக நினைவாகியுள்ளது. தற்போது அவர் ரூ.65,000 மதிப்புள்ள ஹோண்டா இரு சக்கர வாகனத்தை வாங்கி, அன்று எந்த சாலையில் தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து நடந்து சென்றாரோ அதே சாலையில் புது மனிதனாக வலம் வருகிறார்.

சம்பவத்தின் பின்னணி: ஒடிசா மாநிலம், காலாகேண்டி அருகே தானா மஜ்கி என்பவரின் மனைவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காச நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இறந்த மனைவியின் சடலத்தை சொந்த கிராமத்திற்கு எடுத்துச்செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தராததால் தானா மஜ்கி தனது தோளில் சுமந்தபடி 10 கிலோமீட்டர் வரை நடந்து சென்றார். கூடவே அவரது 12 வயது மகளும் அழுதபடியே நடந்து சென்றார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com