குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு

குஜராத் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதையடுத்து 18-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதையடுத்து அங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடுமையான பிரசாரத்தை முன்வைத்து வருகின்றன. இரு கட்சிகளின் தலைவர்களும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

குஜராத்தில் வளர்ச்சி என்ற மாயை ஏற்படுத்தி அதில் 7 செல்வந்தர்கள் மட்டுமே செழிப்பாக வாழ்வதாகவும், பிரதமர் மோடி, இங்கு அவர்களுக்காக மட்டுமே ஆட்சி செய்வதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் சரமாரியாகச் சாடியுள்ளார்.

அதுபோல காங்கிரஸுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை, மாறாக பதவியில் மட்டும்தான் குறியாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடியும் பதிலடி அளித்து வருகிறார். இதனால், இங்கு 5-ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைக்குமா அல்லது காங்கிரஸ் வெற்றிபெறுமா என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தல் டிசம்பர் 9-ந் தேதி சனிக்கிழமை (நாளை) நடைபெறவுள்ளது. இதில், மொத்தம் 89 தொகுதிகளுக்கு 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் வாக்களிக்க 2.12 கோடி பேர் தகுதி பெற்ற வாக்காளர்கள் ஆவர்.

பின்னர் டிசம்பர் 14-ந் தேதி 2-ஆம் கட்டமாக 93 இடங்களுக்கான தேர்தல் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com