அகமது படேலை குஜராத் முதல்வராக்கக் கோரும் சுவரொட்டிகளால் சர்ச்சை

குஜராத் எம்.பி. அகமது படேலை அந்த மாநில முதல்வராக்குவதற்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் சர்ச்சை எழுந்துள்ளது.

குஜராத் எம்.பி. அகமது படேலை அந்த மாநில முதல்வராக்குவதற்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் சர்ச்சை எழுந்துள்ளது. எனினும், குஜராத் மக்களைத் திசை திருப்ப பாஜக செய்யும் தந்திரம் என்று அகமது படேல் குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத்தில் முதல்கட்ட சட்டப் பேரவைத் தேர்தல் சனிக்கிழமை (டிச. 9) நடைபெறவிருக்கும் நிலையில், அந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பழைய சூரத் நகர் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சில சுவரொட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அகமது படேல் ஆகியோரின் படங்களைக் கொண்டிருந்த அந்த சுவரொட்டியில், "மக்களிடையே ஒருமைப்பாடு நிலைக்கவும், அகமது படேலை மாநிலத்தின் அடுத்த முதல்வராக்குவதற்கும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்
களியுங்கள்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், இதில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும், தோல்வி பயத்தில் இருக்கும் பாஜக-வினரே பொதுமக்களைக் குழப்புவதற்காக அந்த சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதாக அகமது படேல் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
போலியான சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலமும், தவறான பிரசாரங்களைச் செய்வதன் மூலமும் தங்களது தோல்வி பயத்தை பாஜகவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
தோல்விக்கு அஞ்சி, முற்றிலும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. குஜராத் முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை; இனி போட்டியிடப் போவதும் இல்லை.
மாநிலத்தில் கடந்த 22 ஆண்டுகளாக நடைபெற்ற தங்களது ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களிலிருந்து மக்களைத் திசை திருப்ப, பொய்ப் பிரசாரங்கள் மூலம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் உத்தியை மட்டுமே பாஜக நம்பியுள்ளது. எனினும், இந்த முறை அவர்களிடம் பொதுமக்கள் ஏமாற மாட்டர்கள் என்றார் அகமது படேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com