ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுக்கான சர்வதேச கூட்டமைப்பில் இணைகிறது இந்தியா

பேரழிவு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் சர்வதேச அமைப்பான "வாசினார் கூட்டமைப்பில்' இந்தியாவும் ஓர் உறுப்பு நாடாக இணையவுள்ளது.

பேரழிவு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் சர்வதேச அமைப்பான "வாசினார் கூட்டமைப்பில்' இந்தியாவும் ஓர் உறுப்பு நாடாக இணையவுள்ளது.
ஆஸ்திரிய நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த அமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகள் அனைத்தும் இதற்கான அனுமதியை அளித்துள்ளன. இதையடுத்து, "வாசினார் கூட்டமைப்பில்' இணையும் 42}ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
பொதுவாக, வல்லாதிக்க நாடுகளானது, தங்களது தோழமை நாடுகளுக்கு பேரழிவு ஆயுதங்களை ஏற்றுமதி செய்கின்றன. மேலும், தொழில்நுட்பங்களையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றன. இந்த நடவடிக்கைகளுக்கு கடிவாளமிடப்படாதபட்சத்தில், அவை சிறு நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே, ஆயுத ஏற்றுமதி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக ஒரு பிரத்யேக அமைப்பு உருவாக்கப்பட்டது. "வாசினார் கூட்டமைப்பு' எனப்படும் அதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஆர்ஜென்டீனா உள்ளிட்ட 41 நாடுகள்உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில், தற்போது இந்தியாவையும் அதில் இணைக்க அந்நாடுகள் அனுமதியளித்துள்ளன. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்ததத்துக்கு இந்தியா உடன்பட மறுத்ததை உலக நாடுகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது "வாசினார் கூட்டமைப்பில்' இணைவது ஆயுதப் பரவல் தடை தொடர்பான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருப்பதை உணர்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com