இந்தியாவின் கலாசார பாரம்பரியம் கும்பமேளா: யுனெஸ்கோ அங்கீகாரம்

இந்தியாவில் கொண்டாடப்படும் கும்பமேளாவை நமது நாட்டின் கலாசாரப் பாரம்பரியமாக ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான (யுனெஸ்கோ) அங்கீகரித்துள்ளது.

இந்தியாவில் கொண்டாடப்படும் கும்பமேளாவை நமது நாட்டின் கலாசாரப் பாரம்பரியமாக ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான (யுனெஸ்கோ) அங்கீகரித்துள்ளது. உலகில் அதிகமான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடும் ஆன்மிக நிகழ்வாக கும்பமேளா விளங்குகிறது.
அலாகாபாத், ஹரித்துவார், உஜ்ஜயனி, நாசிக் ஆகிய நகரங்களில் கும்பமேளா நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலாகாபாத்தில் பூரண கும்பமேளா நடைபெறுகிறது. இது தவிர 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாக்களின்போது 
பக்தர்கள் நதிகளில் புனித நீராடுவது வழக்கம்.
யுனெஸ்கோவின் அங்கீகாரம் மூலம், மதம் சார்ந்த நிகழ்ச்சிக்காக மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகள் நடைபெறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. போட்ஸ்வானா, கொலம்பியா, வெனிசூலா, மங்கோலியா, மொராக்கோ, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளன.
இது தொடர்பாக மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில், "இந்தியாவின் கலாசாரப் பாரம்பரியமாக கும்பமேளாவை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது அனைவருக்கும் பெருமையளிக்கும் விஷயமாகும். உலகிலேயே ஜாதி மற்றும் பாலினப் பாகுபாடு இன்றி கோடிக்கணக்கான பக்தர்கள் அமைதியான முறையில் கூடும் நிகழ்வு கும்பமேளா மட்டும்தான்' என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com