ஊடுருவல்களைத் தடுப்பதற்கு ஒருங்கிணைந்த கூட்டுப் படை: ராஜ்நாத் சிங்

வங்கதேச எல்லை வழியாக, சட்ட விரோத ஊடுருவல்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்கு ஒருங்கிணைந்த கூட்டுப் படை விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
வங்கதேசத்தை ஒட்டியுள்ள மாநிலங்களின் முதல்வர்களுடனான கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால்.
வங்கதேசத்தை ஒட்டியுள்ள மாநிலங்களின் முதல்வர்களுடனான கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால்.

வங்கதேச எல்லை வழியாக, சட்ட விரோத ஊடுருவல்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்கு ஒருங்கிணைந்த கூட்டுப் படை விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
வங்கதேச எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள மாநிலங்களின் முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம், கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்கம், அஸ்ஸாம், மிúஸாரம், மேகாலயம், திரிபுரா ஆகிய 5 மாநிலங்களின் முதல்வர்களும், அவற்றின் உள்துறை அமைச்சர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் ராஜ்நாத் சிங் 
பேசியதாவது:
வங்கதேசத்துடன் இந்தியா நட்புறவைப் பேணி வருகிறது. அந்த நாட்டுடன் சட்ட ரீதியிலான வர்த்தகம் நடைபெறுவதையும், எல்லைகள் வழியாக இரு நாட்டு மக்கள் சட்டப்பூர்வமாக வந்து செல்வதையும் இந்திய அரசு ஊக்குவிக்கிறது. அதேவேளையில், சட்ட விரோதமாகக் குடியேறுவது, கால்நடைகளைக் கடத்துவது, கள்ள நோட்டுகள், போதைப்பொருள்கள் ஆகியவற்றைக் கடத்துவது போன்ற சட்ட விரோதச் செயல்களைத் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
வங்கதேசத்தில் இருந்து எல்லைப் பகுதிகள் வழியாக, சட்ட விரோதமாகக் குடியேறுபவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. அவர்கள், நாச வேலைகளில் ஈடுபடுவார்கள் என்பதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே, எல்லைப் பகுதிகள் வழியாக, ரோஹிங்கயா அகதிகளும், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களும் ஊடுருவுவதைத் தடுப்பதற்கு 5 மாநில அரசுகளும் கூடுதல் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க முடியும்.
இந்தியா-வங்கதேசம் இடையிலான 4,036 கி.மீ. தொலைவு எல்லையைப் பாதுகாப்பதற்கு ஒருங்கிணைந்த கூட்டுப் படை அமைக்கப்படும். அதில், ராணுவம், துணை ராணுவம், மாநில காவல் துறை ஆகியவற்றைச் 
சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்கள்.
இதுதவிர, எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில காவல் துறை, உளவு அமைப்புகள் ஆகியவற்றை கண்காணிப்பில் ஈடுபடுத்துவது, தடுப்பு வேலிகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார் ராஜ்நாத் சிங்.
அதைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், மத்திய அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தார். அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் பேசுகையில், எல்லை வழியாக, கால்நடைகள் உள்ளிட்டவை கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com