பிகாரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிக்கு பான், ஆதார், பாஸ்போர்ட் கிடைத்தது எப்படி? அதிர்ச்சித் தகவல்

பிகாரில் வசித்து வந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷேக் கோபால்கஞ்ச் நயீமுக்கு பான் அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் என அனைத்தும் வழங்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிக்கு பான், ஆதார், பாஸ்போர்ட் கிடைத்தது எப்படி? அதிர்ச்சித் தகவல்


பாட்னா: பிகாரில் வசித்து வந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷேக் கோபால்கஞ்ச் நயீமுக்கு பான் அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் என அனைத்தும் வழங்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வரை கல்லூரி மாணவர் போல வசித்து வந்த ஷேக் அப்துல் நயீம், அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றும் எம்.ஏ. பட்டப்படிப்பும் முடித்துள்ளது தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த நயீம் (37), பிகாரின் புரானி சௌக் என்ற பகுதியில் சுஹைல் கான் என்ற பெயரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளான். அதே சமயம், பிகாரில் முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதப் பாதையில் மாற்றி, அவர்களை ஸ்லீப்பர் செல்களாக மாற்றும் வேலையும் செய்துள்ளான்.

இந்த நிலையில், நவம்பர் மாதம் 28ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு வாராணசியில் அவனை கைது செய்தது.

அவனிடம், பாஸ்போர்ட், பான் அட்டை, ஆதார் அட்டை என அனைத்தும் இருந்தது கண்டு தேசிய புலனாய்வு அமைப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நயீமிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், லஷ்கர் இ தொய்பாவின் தரகராக செயல்பட்ட பேதார் பக்தை, தேசிய புலனாய்வு அமைப்பு டிசம்பர் 2ம் தேதி கைது செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com