யமுனை நதிக்கரை சமவெளி பாதிப்புக்கு "வாழும் கலை' அமைப்புதான் பொறுப்பு

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரின் "வாழும் கலை' அமைப்புதான் தில்லியில் யமுனை நதிக்கரை சமவெளி பாதிப்படைந்ததற்கு பொறுப்பு என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
யமுனை நதிக்கரை சமவெளி பாதிப்புக்கு "வாழும் கலை' அமைப்புதான் பொறுப்பு

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரின் "வாழும் கலை' அமைப்புதான் தில்லியில் யமுனை நதிக்கரை சமவெளி பாதிப்படைந்ததற்கு பொறுப்பு என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வாழும் கலை அமைப்பு ஏற்கெனவே அளித்துள்ள ரூ.5 கோடியை யமுனை சமவெளிப் பகுதியை சீரமைக்க பயன்படுத்த வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஸ்வதேந்தர் குமார் உத்தரவிட்டுள்ளார். எனினும், சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்ததற்காக வாழும் கலை அமைப்பிடம் இருந்து கூடுதலாக இழப்பீட்டுத் தொகையை எதைவும் வசூலிக்க தீர்ப்பாயம் உத்தரவிடவில்லை.
நீதிபதி ஜாவேத் ரஹீம், சுற்றுச்சூழல் துறை வல்லுநர் பி.எஸ்.சாஜ்வான் ஆகியோரும் இந்தத் தீர்ப்பை அளித்த பசுமைத் தீர்ப்பாயத்தில் இடம் பெற்றிருந்தனர்.
வாழும் கலை அமைப்பால் யமுனை நதிக்கரை சமவெளிக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய எவ்வளவு செலவாகும் என்பதை தில்லி நகர மேம்பாட்டு ஆணையம் கணக்கிட்டு அறிக்கை அளிக்க வேண்டும். அத்தொகை வாழும் கலை அமைப்பு ஏற்கெனவே செலுத்திய ரூ.5 கோடிக்கு மேல் இருந்தால் அதனை அந்த அமைப்பிடம் இருந்து வசூலிக்க வேண்டும். அதே நேரத்தில் குறைவான தொகை செலவானால் மீதித்தொகையை அந்த அமைப்பிடம் திருப்பி அளிக்க வேண்டும்.
இனி பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நிகழ்ச்சியையும் யமுனை நதிக்கரை சமவெளியில் நடத்தக் கூடாது என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த 2016-ஆம் ஆண்டு, யமுனை நதி சமவெளிப் பகுதியில் வாழும் கலை அமைப்பு சார்பில் உலக கலாசாரத் திருவிழா நடத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது.
உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு: 
பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக இருப்பதாக வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து விதிகளையும் பின்பற்றிதான் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தீர்ப்பாயத்தின் முடிவு ஏமாற்றமளிக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com